நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கவலையை யாராலும் தவிர்க்க முடியாதுதான்…
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சுவிட்சர்லாந்தில் உணவுப்பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக சுவிஸ் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதால், உணவுப்பற்றாக்குறை ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளித்துள்ள அரசு, ஆகவே பயந்து உணவுப்பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்துள்ள அதே நேரத்தில், பொருட்கள் விலை அதிகரிப்பை தடுப்பது மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முட்டை, வெண்ணை முதலான பொருட்கள் எளிதில் இறக்குமதி செய்யப்படுவதற்காக அவற்றின் மீதான இறக்குமதி வரிகள் தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நேரத்தில், பல்வேறு வகை இறைச்சியையும் வாங்கி மக்களுக்கு வழங்குவதற்காக 3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை செலவிட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.