உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் காலக்கட்டத்தில் இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 9-ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. அதற்கான தகுதிச்சுற்றுகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கொரோனா பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23-ம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 8-ம் திகதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டு அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் 29-ம் திகதி வரை தகுச்சுற்றுகள் நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.