உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கொரோனா தொடர்பான செய்திகள், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளால் பெரும்பாலானோர் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண காய்ச்சல் வந்தால் கூட கொரோனாவாக இருக்கும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் எழுந்தன.
ஆனால் இவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த போது அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.