Loading...
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அவர் மறுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் ராஜிதவை சந்தித்திருப்பதாகவும் அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையத்தளங்களிலும் செய்திகளும், தகவல்களும் வெளியிடப்பட்டுவந்தன.
இதுகுறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளதாவது,
Loading...
சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் பற்றிய எச்சரிக்கையை விடுத்த தினத்திலிருந்து நான் மிகவும் அவதானமாகவே செயற்பட்டு வருகிறேன்.
எந்த சுகயீனமும் எனக்கு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றார் அவர்.
Loading...