கொரோனாவால் உலகளவில் பாதித்த ஏழைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் நிதி சேகரித்து சுமார் 227 கோடி ரூபா வழங்கியுள்ளார் டைட்டானிக் திரைப்படத்தின் கதாநாயகன் லியானர்டோ டிகாப்ரியோ.
உலகளாவிய பேரவலத்தை ஏற்படுத்திய கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்த வந்த பல கோடி மக்கள் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பினை சந்தித்து பட்டிச்சை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இந்நிலையில் உலகளாகவிய பிரபலங்கள் தங்களது மனிதாபிமான செயற்பாடாகா தம்மால் இயன்ற தொகைகளை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக வழைங்கிவருகின்றனர்.
அந்தவகையில் டைட்டானிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற லியானர்டோ டிகாப்ரியோ தனது அறக்கட்டளை மூலமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த 227 கோடி ரூபாவினை, ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் என வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.