மூன்றாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அதிகரித்தாலும் அதற்கு இணையாக நாள்தோறும் கொரோனாவிலிருந்து பரிபூர்ணமாக குணமடைந்தும் வெளியேறிச்செல்வதையும் அவதானிக்க கூடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே நாட்டில் தொடர்ந்தும் சில பிரதேசங்களில் ஊரடங்கு அமுலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.