இத்தாலியில், கொரோனா தொற்றால் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பலியானதால், சக ஊழியர்கள் உளவியல் ரீதியாக அவதிபடுவதாக மருத்துவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு பெப்ரவரி மாததில் மட்டும் 80 மருத்துவர்கள் 21 செவிலியர்கள் உயிரிழந்தனர்.
அதில், இரண்டு செவிலியர்கள் கொரோனாவுக்கு அஞ்சி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
தற்போது 12,000 மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், லோம்பார்டியில் உள்ள ப்ரெசிகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் 300க்கும் மெற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெடலி சிவில் தொற்றுநோய்கள் பிரிவின் இயக்குனர், பேராசிரியர் Francesco Castelli, Sky Newsக்கு அளித்த பேட்டியில் மருத்துவ பணியாளர்கள் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது “ அடுத்து யாருடைய இறப்பு என்று தோன்றுகிறது. நாங்கள் அனைவரும் சக ஊழியர்கள் என்பதை விட நண்பர்கள்.
அனைத்து பயணியாளர்களும் வீடுகளிலும் தனியாகவே உள்ளனர். வீடுகளில் தொற்றுகளை பரப்பக்கூடாது என்பதனால், உறவினர்களுடன் கூட நெருங்கி பழகாமல் உள்ளோம்.
ஏற்கனவே இருக்கும் பணி சுமை, சோர்வு, இவற்றுடன் தற்போது நிலவும் இந்த தனிமை கூட ஒரு சோர்வை தந்துவிட்டது”.என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து போராட ரோமில் 6 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை இயக்குநர், Antonino Marchese ஏற்கனவே இங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு பணி சுமை அதிகம் உள்ளது. அங்கு அனுப்ப மருத்துவர்களோ செவிலியர்களோ இனி இல்லை.
ஒவ்வொரு மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து 14 மணிநேரம் பணி செய்து வருகின்றனர்.
இந்த பணியில் அனைவரும் சுத்தமாகவும், பரப்பு காரணியாகவும் இருக்ககூடாது என்று நினைக்கிறோம். ஆரம்பத்தில் நாங்கள் கண்டிபாக நடந்து கொண்டிருக்க வேண்டும் ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இதன் முழு நடிவடிக்கையும் இராணுவத்தை போன்றது.
நோயின் தொடக்கத்தில் பாதுகாப்பு உபகரணம் குறைபாட்டால் பல மருத்துவர்களை இழந்தோம். ஆனால், தற்போது போதுமான உபகரணம் உள்ளது.
இந்த நோய் ஒரு சுனாமி பேரழிவு போல் உள்ளது. நோய் பரவும் நேரத்தில், அதன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மிக தாமதமாக இருந்ததே இதற்கான முக்கிய காரணம்.
என்று சுட்டிக்காட்டியுள்ளார்.