இன்றைய கால பெண்களுக்கு குழந்தையின்மை என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இன்றைய கால உணவு பழக்க முறை ஒரு காரணமாக இருந்தாலும் கூட, கருத்தரிக்காமைக்கு இன்னொரு காரணம் உடலில் அதிகமாக சூடு இருப்பதுதான்.
பெண்ணின் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகுது.
அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகின்றது. எப்படி கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் வாழ முடியும்?
ஏன் தெரியுமா அந்த காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றினாங்க. உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான். இன்றைக்கு அதெல்லாம் எங்க நடக்குது.
மேலைநாட்டு நாகரீக மோகத்தில் நாம் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டோம். அதில் இந்த ஒரு விஷயம் இருக்கு. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு வன்முறை உள்ளது.
எண்ணெய் குளியல்
1 குழிக்கரண்டியில் நல்லெண்ணெயை எடுத்து, அதில் 1 ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் புழுங்கலரிசி, 2 பூண்டு பல் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி அதைத் தலை முதல் தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறத்துவிட்டு, பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து கொண்டு அதில் பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டும். மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை முளைக்காது. உடலை சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வீட்டு வைத்தியம்
50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கை பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.
உடைகளின் முக்கியத்துவம்
நீங்கள் அணிகிற உடைக்கும், உங்கள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு. ‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்கும். அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்து. பெண்கள் கருத்தரிக்காமல் போவதற்கு ஜீன்ஸ் பேன்ட் போன்ற நவீன உடைகள் காரணமாகியுள்ளன.
உயர்ந்த காலணிகளால் ஏற்படும் பிரச்சினை
குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகள் அணிவதும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். காலணிகள் உயரமாக அணிவதால் கருவாய் கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னையை கொண்டு வந்து விடும்.
மஞ்சளின் மகிமை
இன்றைய கால பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பது கிடையாது. ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை மஞ்சள் ஓட ஓட விரட்டியடிக்கும். மஞ்சளில் அவ்வளவு மகிமை உள்ளது.
மஞ்சளை உள்உறுப்புகளில் பூசுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. இதனால் ஹார்மோன் கோளாறுகள் சரியாகின்றன. அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் விரைவில் கை கூடும்.
கர்ப்பம் தரிக்க சித்த மருத்துவம்
களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல ஆரோக்கியமாக வளரும்.