கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தொற்று நோய் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காற்றில் பரவ கூட வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் பரவியது, அதை பலரும் நம்ப தொடங்கினார்கள்.
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய மருத்துவர் ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ் தொற்று நோய் காற்றில் பரவும் வியாதி அல்ல என்றும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நீர்துளிகள் பரவும் தொற்று நோய் என்றும் தெரிவித்துள்ளது.
உலகத்தை பீதியில் ஆழ்த்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ், ஒருவரின் வாய் மற்றும் மூக்கு, கண் ஆகியவற்றின் நீர் துளிகளில் இருந்தே இன்னொரு ஒருவருக்கு பரவி வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை அறிஞர் மருத்துவர் ஆர் ஆர் கங்ககேத்கர், கொரோனா வைரஸ் என்பது காற்றுவழியாக பரவும் நோய்த்தொற்று அல்ல, ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம் பரவம் நீர்த்துளி தொற்று ஆகும்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளும் பாதிக்கப்படுவர் என கூறியுள்ளார்.