முல்லைத்தீவு சாலைகடல் நீர் ஏரி ஊடாக படகில் புதுக்குடியிருப்பு பகுதிக்கு கஞ்சா கடத்தப்டுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதன்போது படகு ஒன்று சாலை கடல் நீர்ஏரி வழியாக வருவதை அவதானித்த பொலிஸார் சந்தேக நபர்களை துரத்தி சென்ற போது அவர்கள் படகினையும் கொண்டு வந்த கேரளா கஞ்சாவினையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படகில் இருந்த 4 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் நீதிமன்றில் பாரப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மூவர் தப்பி ஓடியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு இருட்டுமடு காட்டுப்பகுதியின் ஆற்றங்கரையில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் காச்சிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத மதுபானம் காச்ச பயன்படுத்தப்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் தப்பிஓடியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது 7 பரல் கோடா 58 லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.