Loading...
இன்றையதினம் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த இத்தாலிய கப்பலான மக்னிபிகாவிலிருந்து அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையில் ஜேர்மன் பிரஜையை ஸ்ரீ லங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த கப்பலின் கப்டன் விடுத்த வேண்டுகோளை அடுத்து 79 வயதான ஜேர்மன் பிரஜையை மீட்ட கடற்படையினர் கரையோரம் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதேவேளை இந்த கப்பலில் பணியாற்றிய ஸ்ரீலங்கா நாட்டவர் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவரையும் கடற்படையினர் மீட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இவ்வாறு மீட்கப்பட்ட அவர் கடற்கரையோரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பூசாவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்.
Loading...