இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறிய நிலையில், அதைக் கேட்காமல் கணவர் வெளியே சென்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரு அருகே பார்லியா பகுதியை சேர்ந்தவர், ரமீஷா பானு. இவருக்கும் அப்பாஸ் அலி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு அமலில் இருப்பதால், அப்பாஸ் வீட்டிலிருந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டிலிருந்ததால் அருகில் இருக்கும் தனது மாமா வீட்டிற்குச் சென்று வருவதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். மனைவி வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்பியுள்ள நிலையில், வீட்டில் மனைவியைக் காணும் என்பதால் அனைத்து அறைகளிலும் தேடிய போது, மனைவி ஒரு அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரது பேச்சை நான் கேட்காததால் தான், ரமீஷா பானு தற்கொலை செய்து கொண்டார் என அப்பாஸ் கதறி அழுதுள்ளார். தற்போது ரமீஷா பானுவின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.