கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி கனிகாகபூர் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி லண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளனர். ஆனால், அவர் தன்னை தனிமைபடுத்தி கொள்வதற்கு பதிலாக லக்னோவில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அதில், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னை முழுவதும் தனிமைபடுத்தி கொள்ளாத கனிகாகபூர் மீது லக்னோ தலைமை மருத்துவ அதிகரி புகார் அளித்தார்.
இந்நிலையில், கனிகாகபூர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். நான்கு முறை அவருக்கு பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவற்றில் கொரோனா தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன.
இதனால், மீண்டு பல சர்ச்சைகள் எழுந்தன. அதில், கனிகா சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 4ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்ற இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.