அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்துள்ள நிலையில் கொரோனா அச்சத்தால் பரிசு பணத்தை நகர அலுவலகத்தில் உடனடியாக வாங்கி கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Tennessee மாகாணத்தின் Nashville நகரை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு $9.01 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.
இதன் மூலம் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.
ஆனால் Nashvilleல் உள்ள மாவட்ட லொட்டரி அலுவலகம் கொரோனா பீதி காரணமாக மூடப்பட்டுள்ளது.
இங்கு தான் வெற்றி பெற்றவர்கள் தங்களின் பரிசு தொகையை பெற வேண்டும்.
இதன் காரணமாக லொட்டரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்திக்கும் நேரத்தை வெற்றியாளர் முன்னரே முன்பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பின்னரே அவருக்கு பரிசு தொகை வழங்கப்படும் என தெரியவந்துள்ளது, இதனால் அவரால் உடனடியாக பரிசு பணத்தை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.