கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் கால்பந்து கிளப்பான ஸ்டேட் டி ரீம்ஸின் மருத்துவர் பெர்னார்ட் கோன்சலஸ் தற்கொலை செய்து கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா உறுதிசெய்யப்பட்ட 60 வயதான கோன்சலஸ் தனது மனைவியுடன் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார், தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது முடிவை விளக்கி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
இறந்தவரை நன்கு அறிந்த ரீம்ஸ் மேயர் அர்னாட் ராபினெட், கடிதம் குறித்து தனக்குத் தெரியும் என கூறியுள்ளார்.
அவரது பெற்றோர், அவரது மனைவி, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தனது முடிவை விளக்கி கடிதம் எழுதியுள்ளது குறித்து எனக்குத் தெரியும், ஆனால் அதன் உள்ளடக்கங்களை நான் புறக்கணிப்பேன். அவர் ஒரு அர்ப்பணிப்பான மற்றும் மிகவும் அன்பான மனிதர் என்று மேயர் ராபினெட் கூறினார்.
அதே நேரத்தில், கிளப்பை சேர்ந்த ஒருவர், கோன்சலஸ் ஒரு வாரத்திற்கு முன்பு சந்தித்து அவருடன் பேசியதாகவும், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கூட தனக்கு தெரியாது என்று ஊடகத்திடம் கூறினார்.
பிரான்ஸ் அரசாங்கத்தின் படி, தற்போது நாட்டில் 92,839 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் உள்ளன, அவற்றில் 8,078 பேர் பலியாகியுள்ளனர்.