ஸ்ரீலங்காவில் இம்மாதம் இறுதிவரையான காலப்பகுதி மிக மோசமானதாக அமையலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதேவேளை இந்த காலப்பகுதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் போடா விட்டால் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2500 வரை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு 48 நாட்களின் பின் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த 48 நாள் காலம் அண்மித்து விட்டது. ஆகவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறான நிலை ஏற்பட்டால் இலங்கை சுகாதாரத்துறை பதிலளிக்க முடியாமல் ஸ்தம்பிதம் அடையலாம்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் கிட்டத்தட்ட 42,000 பேருடன் தொடர்பில் இருந்து இருக்கலாம்.
அவர்களிடம் விரைவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.