நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பினை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தேகந்தே ஞானீஸ்ர தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை வழிப்பாடுகளின் போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பினை சமர்பிக்க முயற்சிகின்றது.
முடிந்தால் புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக் காட்டுமாறு நாம் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சவால் விடுக்கின்றோம்.
இனவாத மதவாத சூழ்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போதைய நாடாளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என இத்தேகந்தே ஞானீஸ்ர தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.