மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. ஈரானில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் நாங்கள் உதவி கேட்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தானவல் வெளியிட்டுள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை தாங்கள் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அப்பாஸி மவ்சாவி இது தொடர்பில் பேசிய போது, “கொரோனா வைரஸுக்கு எதிரான சண்டயில் ஈரான் அமெரிக்காவிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஆனால், ஈரான் மீதான் பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது.
இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.