Loading...
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக பொது மருத்துவமனைகளை நாடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேபோன்று சுகாதார அமைச்சின் சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Loading...