யேமனில் ஊட்டச்சத்தின்மை காரணமாக பத்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் (UNICEF) நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பேரழிவை எதிர்நோக்கிவரும் யேமனில், சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி பட்டினியால் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேயனில் இவ்வாறு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கையானது, கடந்த 2014ஆம் ஆண்டின் பின்னர் சுமார் 200 வீதத்தால் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுமார் 2.2 மில்லியன் மக்கள் உடனடிய பராமரிப்பு தேவையை எதிர்நோக்கி இருக்கின்றனர். அத்துடன் ஊட்டச்சத்தின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக யேமனில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வீதம் உயிரிழப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதில் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடு முக்கிய தாக்கம் செலுத்தி வருகிறது.