கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டநிலையில் தற்போது பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் பகலில் வெளியே உடற்பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் உள்ளூர் நேரம் 10:00 முதல் 19:00 வரை நடைமுறையில் உள்ளன, புதன்கிழமை முதல் இநத தடை நடைமுறைக்கு வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகிலேயே பிரான்ஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உயர்ந்த இடத்தில் நிற்கும் ஒரு நாடாகும்.
8,911 பேர் அங்கு இறந்துள்ளனர், மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 100,000 ஆகும்.
இதேவேளை ‘நாங்கள் ஒரு போரில் இருக்கிறோம்’ என பிரெஞ்சு தலைவர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாதமாக பிரான்ஸ் கடுமையான லொக்டவுண் நடவடிக்கைகளின் கீழ் உள்ளது. வெளியில் செல்லும் எவரும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தைக் கூறும் ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்:
கடுமையான கட்டுப்பாடுகளை மீறியதற்காக பொலிசார் லட்சக்கணக்கான மக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்