உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.
இதற்கான பணிகளை கவனிக்க சமீபத்தில் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தார்.இந்நிலையில் பிரபல தொழிலதிபரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பவருமான லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் அவர்களை கமல் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான ‘மருத நாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் திகதி இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. முப்பது நிமிட படம் தயாரான நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது.
கமல்ஹாசன், சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், பசுபதி, அம்ரீஷ்புரி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் மீதிப்பகுதியை கமல் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.