சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
இதனால் இதை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நாடுகளும், ஊரடங்கு உத்தரவிட்டது. அதன் பின்னர் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறினார்கள்.
இந்நிலையில், முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிர் வாழும் என்றும், ரூபாய் நோட்டுகள் மற்றும் எவர்சில்வர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது சில நாட்கள் உயிர் வாழலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வீடுகளில் இயல்பாக உபயோகம் செய்யப்படும் கிருமி நாசினிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள், சோப்கள் போன்றவை வைரஸை எளிதில் கொண்டு விடலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், அச்சடிக்கப்பட்ட காகிதம், டிசு பேப்பர் போன்றவற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்கு, மரப்பலகை மற்றும் துணிகளில் இரண்டு நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியும் நபர்கள், முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தொடாமல் இருப்பது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.