சீனாவில் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பரவி கடும் உயிர் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸினால் இலங்கையிலும் பாதிப்பு தற்போது அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதுவரை இலங்கையில் 185 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸினால் சரியாகி வீடு திரும்பியவர்கள் 42 பேராக காணப்படும் நிலையில், இன்று கொரோனாவினால் ஒருவர் மரணமடைந்துள்ளார். இலங்கையில் தற்போது வரை கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
ஆனால் வேலை நிமிர்த்தமாக அண்டை மாநிலங்களுக்கு சென்று வீடு திரும்ப முடியாத நிலையில் பல மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் இலங்கை கொழும்பில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத முதியவர்கள், இளைஞர்களின் நிலை கண்கலங்க வைத்துள்ளது.
குறித்த காணொளியில் இளைஞர்கள் கூறுகையில், தங்கும் இடம், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், பொலிசாரின் கண்களுக்கு பயந்து இவர்கள் 14 நாட்களாக இவ்வாறு காணப்படுகின்றனர்.
இதில் முதியவர் ஒருவர் தற்போது இருமலுடன் காணப்படுகின்றார். குறித்த காட்சியின் மூலம் தங்களுக்கு எப்படியாவது உதவி செய்வதற்கு யாராவது வருவார்களா? என்ற ஏக்கத்தில் காணப்படுகின்றனர்.
கொழும்பில் 14 நாட்கள் சிரமப்பட்டு வீடு திரும்ப முடியாமல்
இன்றைய சூழ்நிலையில் எம்மவர்கள் கொழும்பில் 14 நாட்கள் சிரமப்பட்டு வீடு திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள். இவர்களுக்கு யாராவது உதவ முன்வாருங்கள்
Publiée par உண்மையின் தரிசனம் sur Dimanche 5 avril 2020