கொரோனா வைரஸ் அபாய வலயங்களில் ஒன்றான களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம பிரதேசத்தில் எழுந்துள்ள மனிதாபிமன நெருக்கடி குறித்து, மூத்த முஸ்லிம் அரசியல்வாதியான ஏ.எச்.எம். பௌஸி பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நேரடி கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரத்தைக் கையாளுமாறு பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்சவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய அட்டுளுகம விவகாரம் குறித்து பஸில் ராஜபக்ச, மூத்த அரசியல்வாதி பௌசியிடம், தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார்.
அங்குள்ள நிலவரம், மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை, தொடரும் ஊரடங்குச் சட்டத்தால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பரிதாபம் எனப் பலவற்றை பௌஸி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் அட்டுளுகம விவகாரம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.