அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் சடலங்கள் மருத்துவமனை ஒன்றில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க உள்ளது. தற்போது அந்நாட்டில் 410,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14,210 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,369-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,581-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்ப், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களின் வரிசையில் நியூயார்க் இருக்கிறது. இங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் கருப்பு பை ஒன்றில் வைத்து போர்த்தப்பட்டு, அங்கிருக்கும் அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதை அங்கிருக்கும் செவிலியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது. மேலும் கொரோனாவின் தீவிரம் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களே, ஊரடங்கு உத்தரவு, சமூகவிலகல்களை கடைபிடியூங்கள் மக்களே என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இது உண்மையில் அமெரிக்க மருத்துவமனையில் எடுக்கப்பட்டதா? இல்லை வேறு எப்போதாவது எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
Situation in a New York hospital… to all those who still hasn’t understood the lockdown importance…#CoronavirusLockdown pic.twitter.com/O06rycvJqm
— Prasath (@imprasath) April 8, 2020