பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு பேர் கைகளை நக்கி, அங்கிருக்கும் உணவுப்பொருட்கள் மீது தடவியதால், பொலிசார் அவர்களை தேடிவருவதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் தீவிரமாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 938-க்கும் மேலாக உள்ளது.
இந்நிலையில் Lancaste சாலையில் Morecambe-ல் இருக்கும் Sainsbury’s store-க்கு வந்த இரண்டு நபர்களின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சரியாக உள்ளூர் நேரப்படி 1.45 மணிக்கு உள்ளே நுழைந்த இவர்கள், கைகளை நக்கி அங்கிருக்கும் இறைச்சி, மற்றும் உணவுப் பொருட்கள் மீது தடவியுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு 101 அல்லது லாக் நம்பர் என்று 0693 என்ற எண்களை வெளியிட்டு, இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், Lancashire இன்ஸ்பெக்டர் James Martin, உடனடியாக அந்த சூப்பர் மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க சொல்லி சுத்தம் செய்யும் படி கட்டாயமாக்கப்பட்டதாகவும், இது ஒரு முற்றிலும் இழிவான செயல் என்று கூறியுள்ளார்.
தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் நெருக்கடியில் இவர்களின் செயல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.