ஈரானில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற உதவுமென அதிக செறிவுடைய மதுபானத்தை அருந்திய 600 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரிதும் பாதித்துவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை அதிகளவில் பாதித்துவருகின்றது.
தினம் தினம் 1000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. உலகளவில் தற்போதுவரை 85000 இற்கு மேற்பேட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரானில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற உதவுமென அதிக செறிவுடைய மதுபானத்தை அருந்திய 600 பேர் பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் இவ்வாறு கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என பல வதந்திகள் பரவிவருகின்றன. இது தொடர்பில் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றது.
இருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று இறப்புக்கள் சம்பவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.