கொரோனா வைரஸின் வீரியத்தால் சர்வதேச ரீதியில் 500 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரிதும் பாதித்துவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை அதிகளவில் பாதித்துவருகின்றது.
தினம் தினம் 1000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. உலகளவில் தற்போதுவரை 85000 இற்கு மேற்பேட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் 500 மில்லியன் மக்கள் வறுமையில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உலக நாடுகள் இவ்வாறானாதொரு இன்னலான நிலையை எதிர்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாட ஜீ 20 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உலக வங்கி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.