Loading...
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஜும்ஆ தொழுகை நடத்திய ஒன்பது பேரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லவ்லேன் பகுதியிலுள்ள திருகோணமலை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில், ஊடரங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் இன்று பகல் ஜும்ஆ தொழுகை நடத்திய நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டளைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுவதாகவும்,
அதான் சொல்வதற்காக முஅத்தினார் பள்ளிவாசலில் நுழைந்ததும் பின்தொடர்ந்து பள்ளிவாசலில் நுழைந்து தொழுகையினை மேற்கொண்ட ஒருசில ஜமாஅத்தாரினாலேயே இக் கைது சம்பவம் நடைபெற்றதாகவும் அப்பள்ளிவாயலின் தலைவர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Loading...