கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இதற்காக பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, கொரோனாவை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பெண்கள் ஆட்சி செய்யும் ஆறு நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் அந்நாட்டு பெண் தலைவர்களை பாராட்டி வருகின்றனர்.
அதில், ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் சிறப்பாக கையாண்டுள்ளன என்றும் இந்த நாடுகளுக்கு உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள் தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரோனா வைரஸ் விவகாரத்தை சிறப்பாக கையாள்கிறார் என்பதை விவரிக்க வாஷிங்டன் போஸ்ட் தலைப்பை வைத்து புரிந்துகொள்ளலாம்.
அதில், நியூசிலாந்து கொரோனா வளைவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
கொரோனா பாதிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்தானது, ‘உங்களுக்கு கொரோனா பாதித்தது போன்று செயல்படுங்கள்’ என்பதுதான் அது.
அதேப்போல், ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்ஜெலா மேர்கல் இருக்கிறார். அவரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஜெர்மனியில் 1,18,235 பேர் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளநிலையிலும், ஜெர்மனியில் 52,407 பேர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். ஜெர்மனியில் குணமடைபவர்கள் 95 சதவீதமாக உள்ளனர்.
இதையடுத்து, பெல்ஜியத்தின் பிரதமர் சோபி வில்மெஸ் இருந்துவருகிறார். பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரையில் குறையவில்லை. இருப்பினும், அவர்களின் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா இறப்பு 10 பேரை எட்டிய நிலையில், வில்லியம்ஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டார்.
பிரதமர் சன்னா மாரின் தலைமையிலான ஃபின்லாந்தில் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து தினசரி இறப்பு விகிதம் குறைந்துவருகிறது. குணமடைந்தவர்களின் விகிதம் 88 சதவீதமாக உள்ளது. அந்த நாட்டில், ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் காட்ரின் ஜகோப்ஸ்டாட்டிர்ஸ் தலைமையிலான ஐஸ்லாந்தில், 99 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதித்த பொருளாதாரத்துக்கு 1.6 பில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 75 சதவீத மக்களுக்கு அடுத்த இரண்டரை மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கிலும், ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. டென்மார்க்கின் பிரதமராக மெட்டி ஃபிரிடெரிக்சென் இருந்துவருகிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
There is something about women leadership that we need to name and appreciate. They seem to handle crises better. Some studies suggest that women leaders tend to have compassion and society at heart. Looking at #COVID19 responce experiences across the world, it makes some sense! pic.twitter.com/JNp3NvSBvt
— Togolani Mavura (@tonytogolani) April 9, 2020
These are leaders leading there country and have the best coronavirus response.
Oh! They’re also all women. pic.twitter.com/jHwGWCZaO0
— Johnathan Ford (@FordJohnathan5) April 10, 2020
So Can we say Women Head of states were more empathetic and took preemptive measures against #coronavirus ? pic.twitter.com/3zTl8ldlsD
— Farah Saadia (@FarahSaadya) April 9, 2020