ஸ்ருதி தற்போது கமல் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து தனது அப்பாவின் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
ஒரு நாற்காலியைகூட என்னால் காதலிக்க முடியும் என்று என் அப்பா கூறுவார். அவரால் முடியும், தன்னை அவர் காதலிப்பதை அந்த நாற்காலியும் விரும்பும். ‘சபாஷ் நாயுடு’ படத்தை அவர் மிக சிறப்பாக தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.
வார்த்தைகளை குழைத்துப்பேச அவருக்கு தெரியாது. ஒரு காட்சியை படமாக்கும்போது தனக்கு தேவையானது கிடைக்கும்வரை அவர் விடமாட்டார்.
இந்தப் படத்தில் நடிப்பது மிக அற்புதமான அனுபவம். ஆனால், இதில் நடிக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு மனஅழுத்தமும், பயமும் அதிகமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.