கொரோனா வைரசுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள் தொடர்ந்து பலியாகி வருவது உலகையே அச்சுறுத்தி உள்ளது. குறிப்பாக 60 வயது முதல் 90 வயது உள்ளவர்களை கொரோனா அதிகம் பாதிக்கிறது. வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களை மருத்துவர்களால் காப்பாற்றவும் முடியவில்லை.
இந்த நிலையில் 80 வயதான ஹாலிவுட் நடிகர் ஆலன் கார்பீல்ட் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
நோஷ்வில்லி, த கண்டிடேட், ஸ்கேட் போர்ட், த ஸ்டன்ட் மேன், வைல்ட் சைட் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணசித்ர வேடத்திலும் நடித்துள்ளார். ஆலனின் மரணத்திற்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்து வருகிறார்கள்.