உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருந்து உயிரிழப்பு ஏற்படாத நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக இந்த நோயால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 ஆயிரத்து 814 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 587 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 762 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அதுமட்டுமின்றி மகக்ள் சமூக விலகல்களை நிச்சயம் கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,.
இப்படி உலகின் பல நாடுகள் இந்த கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
அந்த வகையில், கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள் மற்றும் தீவுகளின் பட்டியல்
- ரியூனியன்
- வியட்நாம்
- கயானா
- ஃபரியோ தீவுகள்
- கிப்ரல்டர்
- கம்போடியா
- ரவண்டா
- மடகாஸ்கர்
- அருபா
- பிரெஞ்சு கயானா
- உகாண்டா
- பிரெஞ்சு பாலினிசியா
- மெக்கோ
- கயானா பிசயூ
- எரிட்ரியா
- மோசாம்பிக்யூ
- மாலத்தீவுகள்
- ஈக்வடொரியல் கயானா
- நியு கல்டோனியா
- டோமினிகா
- பிஜி
- லஓஸ்
- மங்கோலியா
- நமீபியா
- செயிண்ட் லூசிகா
- கிரினடா
- செயின் வின்செண்ட் கிரேனெடினெச்
- ஈஸ்வட்னி
- சாட் குடியரசு
- கிரீன்லாந்து
- செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்
- செசில்ஸ்
- நேபாளம்
- மொன்செரட்
- மத்திய ஆப்ரிக்க குடியரசு
- சியாரா லியோன்
- செயிண்ட் பெர்த்
- பூட்டான்
- பிலாக்லாந்து தீவுகள்
- சா டோமி மற்றும் பிரின்சிபி
- தெற்கு சூடான்
- மேற்கு சஹாரா
- அகுயிலா
- பிரிட்டிஷ் வெரின் தீவுகள்
- புருன்டி
- கரீபியன் நெதர்லாந்துஸ்
- பப்புவா நியூகினினா
- டைமூர் டெஸ்டி
- செயிண்ட் பெர்ரி மியூலான்