பருக்கள் முகத்தில் மட்டும் உண்டாவதல்ல அவை உச்சந்தலையில் கூட உண்டாகலாம்.
உச்சந்தலையில் பருக்கள் உண்டாவதற்கான அடிப்படைக் காரணம் மோசமான கூந்தல் பராமரிப்பு வழிமுறைகள் ஆகும்.
இது தவிர வேறு சில காரணங்களும் உச்சந்தலையில் பருக்கள் தோன்றுவற்கு காரணமாக உள்ளன.
சில நேரங்களில் ஒன்றிரண்டு பருக்கள் மட்டுமே தோன்றிய நிலையில் அவற்றில் இருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பரவி இன்னும் அதிக பருக்களுக்கு வழிவகுக்கும்.
மற்ற இடங்களில் தோன்றும் பருக்கள் போலவே, தலைமுடியின் வேர்க்கால்கள், உச்சந்தலையில் உள்ள சீபம் என்னும் எண்ணெய்த்தன்மையுடன் ஓட்டும் போது பருக்கள் தோன்றுகிறது.
சீபம் என்பது சருமத்திற்கு ஈரப்பதத்தை நிர்வகிக்க உதவும் ஒரு சரும எண்ணெயாகும். முடி வேர்கால்களின் துளைகளுக்குள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுழைந்து, கட்டிகளாக மாற்றம் பெற்று ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்குகிறது.
உச்சந்தலை பருக்களுக்கு காரணமான சில முக்கியமான பாக்டீரியாக்கள்
- பூஞ்சை தொற்று
- ஸ்டேஃபிளோகோகஸ் எபிடெர்மிடிஸ்
- ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ்
- டெமோடெக்ஸ் ஃபோலிகுலோரம்
உச்சந்தலையில் பருக்கள் வராமல் தடுக்க சில குறிப்புகள்
- துளைகளில் அழுக்குகள் படியாமல் தவிர்ப்பதில் உச்சந்தலையின் சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- உங்கள் தலைமுடி எண்ணெய் தன்மையுடன் இருக்கும்போது அல்லது அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில், உங்கள் தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
- ஒவ்வாமை அளிக்காத மூலிகை சேர்த்து தயாரிக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
- ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- வைட்டமின் ஏ, டி, ஈ போன்ற சத்துகள் அதிகம் உள்ள சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்வது கூந்தல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்றாலும் அளவுக்கு அதிகமாக கூந்தலைக் கழுவுவதால் கூட சில நேரங்களில் உச்சந்தலையில் பருக்கள் உண்டாகலாம்.
- அதுபோன்ற நிகழ்வுகளில், சரியான தீர்வுக்கு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.