கொரோனாவால் மரணமா அல்லது பொருளாதார இழப்பால் மரணமா என அமைச்சர்கள் முடிவுசெய்யும் நிலையில் பிரித்தானியா இருக்கிறது என பிரித்தானிய சுகாதாரச் செயலர் கூறியுள்ளார்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முடங்கிக் கிடப்பதையடுத்து பல மில்லியன் மக்கள் வேலையிழக்கும் பெரும் அபாயம் இருப்பதால், அது மக்கள் மீது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமென்பதை அறிவதற்கான கணக்கிடும் வேலை நடந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock.
அதாவது, வேலையின்மை காரணமாக ஏற்படும் வறுமையால் அதிகம்பேர் உயிரிழக்கப்போகிறார்களா அல்லது கொலைகாரக் கொரோனாவால் அதிகம்பேர் உயிரிழக்கப்போகிறார்களா என்பதைக் கணக்கிடவேண்டியுள்ளது என்றார் அவர்.
அதே நேரத்தில், கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், அதைக் கணக்கிடுவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்மை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கொரோனாவால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கையை விட அதிகரிக்கலாம் என்பது குறித்து அமைச்சர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்து மே 5 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துவிட்டது.
பிரித்தானியா அடுத்த வாரம் இது தொடர்பாக முடிவெடுக்க உள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து அமைச்சர்கள் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறார்கள்.
இதற்கிடையில், பல மில்லியன் மக்கள் வேலையிழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டுமானால், பெரும் எண்ணிக்கையில் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்வதே அதற்கு ஒரே வழி என்கிறார்கள் நிபுணர்கள்.
இல்லையென்றால் அந்த அளவுக்கு மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது தெரியவராது.
ஆனால், அப்படியே கொரோனா கட்டுப்பாடுகள் இப்படியே நீடிக்குமானால் பொருளாதாரம் பயங்கரமாக பாதிக்கப்படும்.
ஆக, எது மக்களை அதிகம் பாதிக்கப்போகிறது, வீழ்ந்து வரும் பொருளாதாரமா அல்லது அதிகரித்துவரும் கொரோனாவா என்பதை அமைச்சர்கள் முடிவு செய்யவேண்டும் என்கிறார் Matt Hancock.