கடந்த நவம்பர் 27-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் இறுதிப்போட்டி கடந்த டிசம்பர் 11-ந் தேதியோடு முடிவடைந்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியை காண திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் வி.இசட்.துரை, மீரா கதிரவன் மற்றும் நடிகர்கள் ஷாம், பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், பிரஜின், கோலி சோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா கிரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர் தியா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
மேலும், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 600 028’ படக்குழுவும், ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படக்குழுவும், ‘விழித்திரு’ படக்குழுவும் வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில், சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600 028 படக்குழுவும் வெற்றிபெற்ற அணியோடு இணைந்து கிரிக்கெட் விளையாடினர்.
பின்னர், அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூ.25,000-க்கான முதல் பரிசை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கினர், இரண்டாம் பரிசுக்கு தகுதி பெற்ற சீ ஹார்ஸ் அணிக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அ.நாசர் அலி மற்றுமு டாக்டர். ரொஃபினா சுபாஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.