பார்க்கில் இரண்டு அதிகாரிகள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாங்கலாம்.அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாராம்..?
அதுக்கு அவங்க ஆயிரம் விவசாயிகளையும், நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்..
அதகேட்ட பத்திரிக்கையாளர் நயன்தாராவ எதுக்கு கொல்லணும்னு கேட்டாராம். அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாராம்.
நான் அப்பவே சொன்னேன்ல அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு. இது சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் தான்.
இதுதான் தமிழகத்தின் நிலையாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிருக்கு தண்ணீர் இல்லாம விவசாயிகள் சொத்துக்கிட்டு வாரான்.
அதப்பத்தி யாரும் கவலைப்படுவதாக தெரியல. ஆனால், இந்த நடிகர், நடிகைகளுக்கு ஒண்ணுன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வாராணுங்கய்யா என்று பொதுமக்கள் விவாசாயிகள் புலம்பி வருகின்றனர்