பஞ்சாப்பில் பாட்டியாலாவில் ஊரடங்கை செயல்படுத்த முனைந்த காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் காவல் உதவியாளரின் கைது துண்டிக்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா காய்கறிச் சந்தை முன்பு காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஒரு வாகனம் வேகமாகச் சென்றுள்ளது.
குறித்த வாகனத்தினை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, சந்தைக்குள் இருந்து ஓடிவந்த கும்பல் ஒன்று காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங்கின் கையை வாளால் வெட்டியுள்ளனர். இதில் அவரது கை துண்டிக்கப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்தும் உள்ளனர்.
உடனடியாக ஹர்ஜித் சிங் சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கையை ஒட்ட வைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்படுவதாக டிஜிபி தினகர் குப்தா தெரிவித்துள்ளார்.
In an unfortunate incident today morning, a group of Nihangs injured a few Police officers and a Mandi Board official at Sabzi Mandi, Patiala. ASI Harjeet Singh whose hand got cut-off has reached PGI Chandigarh.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) April 12, 2020
*Very very disturbing & violent. The police is there to help people & enforce lockdown. Here ASI Harjeet Singh with his own chopped off hand. Condemnable. These culprits need good lesson. pic.twitter.com/hEb46l54O5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 12, 2020