ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கிராம மட்டங்களில் இடம்பெறும் கலை, கலாசார கொண்டாட்டங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறைமா அதிபர் அனைத்து காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.