அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான Stanley Chera என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
Stanley Chera நியூயார்க் நகரின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஆவார். மேலும், இவர், குடியரசு கட்சியின் நன்கொடையாளருமாவார்.
கடந்த நவம்பரில், நியூயார்க் நகரில் நடந்த Veteran’s Day-ல் ட்ரம்பை “எனது அன்பு நண்பரே” என்று அழைத்தார். அதேபோல் டிரம்ப், Chera-வை குறிப்பிட்டார்.
மார்ச் 24ஆம் திகதி நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில், Chera அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் “என் நண்பர் கொரோனாக்கு எதிராக போராடி வருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளைமாளிகை கருத்து தெரிவிக்கவில்லை. chera-வின் குடும்பத்தினரும், அதிபரின் நட்பு குறித்தும் வெளிப்படுத்தி கருத்து தெரிவிக்கவில்லை.