கடந்த ஒரு மாதத்தில் மீண்டும் சீனாவில், இன்று 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில், அதன் வேகம் முற்றிலும் குறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு பின் தான் மக்கள் தற்போது வெளியில் நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதங்கள் இல்லாத அளவு இன்று 108 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 98பேர் வெளிநாட்டினர் என்றும், 10 பேர் உள்ளநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு ஹீலோங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த 7பேரும், தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த 3பேரும் அடங்கும்.
கடும் கொரோனா தொற்றால் அவதிப்பட்ட சீனா, நாடு முழுவதும் முற்றிலும் முடக்கி இருந்தது. இந்நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிகாரிகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
முன்னதாக சீனாவில், 82,160பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 3,341 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.