பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19க்கு பலியானோர் எண்ணிக்கை 717 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இன்று மட்டும் 4,342 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்தவாரம் முழுவதும் பிரித்தானியாவில் கொவிட் 19-க்கு 5 ஆயிரம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,329 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 88,621 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை தலைநகரான லண்டனில் கொரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை நினைத்ததை விட அதிமாகி வருகிறது.
இந்நிலையில், கொரோனா இன்னும் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாகவும் அமைந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அந்நாட்டின் பொது சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.