அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை.இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சில காரணங்கள் உள்ளது.
இது நீரிழிவு நோய் அல்லது சிறுநீர் பாதை தொற்று போன்ற அடிப்படை சிக்கல்களாலும் ஏற்படும். இயற்கையாகவே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் இந்த தொந்தரவு நிலையில் இருந்து நிவாரணம் பெற விரும்புகிறீர்கள் என்றால் வீட்டிலிருந்த படியே பல சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம்.
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக்குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதிக தண்ணீர் குடிப்பதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்குக் காரணம்.
தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு என்ன காரணம்?
- ஆல்கஹால் மற்றும் காபி அதிகமாகக் குடிப்பது
- சிறுநீரக பிரச்சனைகள்
- சிறுநீர்ப்பை பிரச்சனை
- நீரிழிவு நோய்
- மன அழுத்தம்
- கர்ப்பம்
- கவலை
- சிறுநீர் பாதை தொற்று நோய்
- சிறுநீர்ப்பை புற்றுநோய்
- ஸ்ட்ரோக்
- சிறுநீர்ப்பையில் கற்கள்
அறிகுறிகள்
- சிறுநீர் கழிக்கும் போது வலி
- அதிக தாகம் மற்றும் பசி
- காய்ச்சல்
- குளிர்
- கீழ் முதுகு வலி
- வாந்தி மற்றும் குமட்டல்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- இந்த அறிகுறிகள் ஏதேனும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். லேசான அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவதை குறைக்கும் வழியைத் தெரிந்துகொள்ளலாம்.
தயிர்
ஒரு கின்னம் தயிரை தினமும் உட்கொள்ளலாம்.
தயிர் புரோபயாடிக்குகளின் வளமான மூலமாகும். தயிர் உட்கொள்வது குடலுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கவும் தயிர் உதவுகிறது.
துளசி இலைகள்
- 8-10 துளசி இலைகள்
- நீர் (தேவைக்கேற்ப)
- 2 டீஸ்பூன் தேன்
துளசி இலைகளைத் தண்ணீரில் அலசி அரைக்க வேண்டும். இந்த துளசி சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை உட்கொள்ளுங்கள்.
துளசி ஒரு ஆக்ஸிஜனேற்ற மருத்துவ மூலிகையாகும். இது உங்கள் உடலிலிருந்து அனைத்து நச்சுக்களையும் அகற்ற உதவுகிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்க உதவும் இயற்கை ஆண்டிமைக்ரோபியல் பண்புகளும் துளசியில் உள்ளன.
கிரீன் டீ
- 1 டீஸ்பூன் கிரீன் டீ
- 1 கப் சுடு நீர்
தேன்
ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீத்தூள் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும், பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடிக்கலாம். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் அதைக் குணப்படுத்தும். கிரீன் டீயின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இதற்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காவது இருந்தால், கிரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டாம். கிரீன் டீ சக்திவாய்ந்த டையூரிடிக் என்பதால் சிறுநீர் கழிப்பதற்கான வேட்கையை அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பு இருந்தால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- கார்பனேற்றப்பட்ட பானங்கள்
- மது
- காபி மற்றும் டீ
- சாக்லேட்டுகள்
- சிட்ரஸ் பழங்கள்
- காரமான உணவுகள்
- தக்காளி
- சர்க்கரை
- தேன்
- வெங்காயம்