சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை.
ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய நகரான அலெப்போவை கைப்பற்ற இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இராணுவத்தினர் முன்னேறிவரும் நிலையில், மக்களை கேடயங்களாக ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவர்களை உயிருடன் எரிப்பது போன்றும், படுகொலை செய்வதும் போன்ற வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.
பலரும் டுவிட்டரில் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசி வருகின்றனர்.
பெண் ஒருவர், அனைவருக்கும் இதை நான் கூற விரும்புகிறேன், அலெப்போவில் படுகொலைகள் நடந்து வருகின்றன, இதுவே என்னுடைய கடைசி வீடியோவாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.