ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
தற்போது, ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும்.
இதனால் இந்த தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
அவ்வாறின்றி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.