கொடிய கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளதோடு 5 லட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலகையே அச்சுறுத்திவருகின்றது.
உலகளவில் 210 இற்கும் மேற்பட்ட நாடுகளை இந்த உயிர் கொல்லி கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலி அமெரிக்கா பிரான்ஸ் ஸ்பெயின் பிரித்தானியா போன்ற நாடுகளை அதிகளவில் பாதித்துவருகின்றது.
இத்தாலியிலும் பிரான்ஸிலிருந்தும் இறப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக நேற்று மகிழ்ச்சியான தகவல் வெளியானது.
ஆனால் வல்லரசான அமெரிக்காவில் நிலமை மோசமாக செல்கின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 1500 பேர் அமெரிக்காவில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்திலலேயே அதிகளவான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி குறித்த மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.