நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்
அத்தியாவசிய சேவைக்காக பயன்படுத்தலாமென அரசாங்கம் அறிவித்த கடமை அடையாள அட்டையை பாவித்து ஊர் சுற்றிய ஜோடியொன்று பொலிசாரிடம் சிக்கியது.
குறித்த ஜோடி இலங்கை மின்சாரசபையின் கடமை அடையாள அட்டையை பாவித்து காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹம்பாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவவை சேர்ந்த 32 வயதான இளைஞன் மற்றும் கண்டி, பிலிமத்தலாவயில் வசிக்கும் 20 வயது யுவதியுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
அவர்களை ஹம்பாந்தோட்டை நீதிவான் பிணையில் விடுவித்ததையடுத்து, கொரோனா பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட எல்லை கடந்தவர்கள் என்ற அடிப்படையில் குறித்த ஜோடி பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் 12ஆம் திகதி தங்காலை வந்து இரவு உணவகமொன்றில் தங்கியிருந்த அவர்கள் நேற்று திஸ்ஸ நோக்கி பயணித்தபோது பொலிசாரிடம் சிக்கினர்.
இதேவேளை குறித்த ஜோடி கைது செய்யப்படுவது வரையான பயணத்தின்போது, கடமை அடையாள அட்டையை அவர்கள் பயன்படுத்தி பிரயாணம் செய்திருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.