இந்த ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த விளையாட்டாளருக்கான Ballon d’Or விருதை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்ட் பெற்றுக்கொண்டுள்ளார்.
கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் இந்த விருதை நான்காவது முறையாகவும் கிறிஸ்டியானோ ரொனால்ட் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனது கனவு மீண்டும் நனவானது, தனிப்பட்ட முறையிலும், நான் ஆடும் அணிக்கும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. என் மனதில் இந்த ஆண்டு நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது என்று நெகிழ்ந்துள்ளார்.
இந்த ஆண்டில் ரொனால்டோ விளையாடும் கிளப் அணியான ரியல் மாட்ரிட் தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது.
ரொனால்டோ கேப்டனாக செயல்படும் போர்த்துக்ககல் அணி யூரோ 2016-இல் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்த விருதை Lionel Messi பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.