கொரோனா வைரஸ் உலகமெங்கும் பீதியை ஏற்படுத்திகொண்டிருக்கும் நிலையில், பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா, சானிடைசர் லாக்டவுன் என பெயரிட்டு பிரபலத்தை தேடிவருகிறார்கள்.
அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம், சரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு “சானிடைசர்” என பெயர்வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மக்கள் எப்போதெல்லாம் கொரோனா வைரஸ் பெயரை உச்சரிக்கிறார்களோ அப்போதெல்லாம் சானிடைசர் என்ற வார்த்தையும் உச்சரிக்கின்றனர்.
காரணம், “சானிடைசர்” என்பது மிகக்கொடிய வைரஸை கொல்ல பயன்படுகிறது. மேலும், சானிடைசரில் உள்ள சானிடைஸ் என்பது லத்தின் வார்த்தை. இதற்கு ஆரோக்கியம் என்று அர்த்தம். எனவே தங்கள் மகனுக்கு சானிடைசர் என பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதேபோல், மத்தியப்பிரதேசத்தில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயர் வைத்துள்ளனர். காரணம், ஊரடங்கு (lockdown) சமயத்தில் பிறந்ததால் லாக்டவுன் என பெயர் வைத்துள்ளார்களாம். இதற்கு முன்னர் ஏற்கனவே கொரோனா என ஒரு குழந்தைக்கு பெயர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.